வேலணை, சரவணை பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை, கத்தி முனையில் கடத்திய இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (22) மாலை கைது செய்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
திருமணமாகி 8 மாதங்களாகிய குடும்பப் பெண்ணை, இரண்டு சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (22) காலையில் கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பெண்ணை மீட்டதுடன், சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்.
கனடாவில் இருந்து வந்த மணப்பெண்ணை கடத்தியவர் சரண்