புற்றுநோய்க் கட்டிகள் வளர்வதைத் தடுக்க புதிய தொழில்நுட்பம்……………..

375

புற்றுநோயை குணப்படுத்துவது தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.

இத் தொழில்நுட்பத்தில் இரத்த ஓட்டத்தோடு இயைபாக்கமடைந்து செல்லக்கூடிய பஞ்சு போன்ற அமைப்பு ஒன்று வைக்கப்படும்.

இது எலும்பு, ஈரல், சுவாசப்பை என்பவற்றில் ஏற்படக்கூடிய புற்றுநோய்க் கட்டிகள் அல்லது கலங்களை வளரவிடாது தடுக்கின்றன.

இச் சாதனமானது மார்புப் புற்றுநோய் தொடர்பில் எலிகளிலும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருக்கின்றது.

இதற்காக பயன்படுத்தப்படும் பஞ்சு போன்ற சாதனம் 5 மில்லி மீற்றர்கள் விட்டம் கொண்டதாக இருப்பதுடன், நிர்ப்பீடக் கலங்களை சென்றடையும் வகையில் CCL22 எனும் மூலக்கூற்றுடன் சேர்த்து அனுப்பப்படுகின்றது.

SHARE