யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவையொட்டிய இன்றைய நிகழ்வு அதிபர் எஸ்.தயானந்தராசா தலைமையில் கல்லூரி குமாரசாமி மணடபத்தில் இடம்பெற்றது.

424

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவையொட்டிய இன்றைய நிகழ்வு அதிபர் எஸ்.தயானந்தராசா தலைமையில் கல்லூரி குமாரசாமி மணடபத்தில் இடம்பெற்றது. இன்றை நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கலந்துகொண்டதுடன் மற்றும் விருந்தினர்களாக மகளிர் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள். கொழும்பில் இருந்து ஹெலி மூலம் யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சரும் இராஜங்க அமைச்சரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் வந்திறங்கியதைத் தொடர்நதுஅதிபரினால் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டார்கள். காங்கேசன்துறை வீதியில் இருந்து பிரதம விருந்தினர் உட்பட ஏனைய விருந்தினர்கள் அனைவரும் மேளவாத்தியம் முழங்க ஊர்வலமாக மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள். வாத்திய இசை முழங்கியதைத் தொடர்ந்து மங்கள விளக்கினை அமைச்சர்கள் உட்பட ஏனைய விருந்தினர்களும் ஏற்றி வைத்தார்கள். கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து விருந்தினர்களின் உரை, அஞ்சல் தலை வெளியீடு, நூல் வெளியீடு என்பன இடம்பெற்றன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவையொட்டிய இன்றைய நிகழ்வு அதிபர் எஸ்.தயானந்தராசா தலைமையில் கல்லூரி குமாரசாமி மணடபத்தில் இடம்பெற்றது.

jaf 5

jaf 32

jaf n4

jaf

jaffna 2

jaffna

 

SHARE