உள்நாட்டு நீதிமன்றப் பொறிமுறைமையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் – பிரதமர்

309
உள்நாட்டு நீதிமன்றப் பொறிமுறைமையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் - பிரதமர்

உள்நாட்டு நீதிமன்றப் பொறிமுறைமையின் அடிப்படையிலேயே சர்வதேச மனிதாபிமான மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவான வகையிலேயே அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தற்போது சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பின் கீழ் விசாரணை நடாத்தப்படும் எனவும், அதற்காக விசேட சட்டத்தரணிகள் காரியாலயமொன்று அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காரியாலத்திற்கு உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகளது உதவி பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீதவான்களின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அனைத்து விடயங்களும் இலங்கை சட்டங்களினால் அங்கீகரிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE