
இந்தியாவின் கடற்பாதுகாப்பு கரிசனைகள் குறித்து இலங்கை அவதானமாக இருக்கவேண்டும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே சின்ஹா எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்றுவரும் சர்வதேச கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுறைகம் பெருமளவிற்கு இந்தியாவின் கொள்கலன் பரிமாற்றத்தை நம்பியுள்ளது, இந்தியாவின் 30 வீதமான கப்பல் சரக்குகள் இலங்கை ஊடாகவே செல்கின்றன.
இந்தியாவும், இலங்கையும் கடற்பாதுகாப்பு விடயத்தில் இணைந்துசெயற்படுகின்றன, எனினும் இந்தியாவின் கரிசனைக்குரிய விடயங்கள் உள்ளன.
இந்தியாவை மையமாக வைத்தே கொழும்பின் கப்பற்சரக்குகள் பெருமளவிற்கு கையாளப்படுகின்றது.
இதன்காரணமாக இந்தியாவின் கரிசனைக்குரிய விடயங்கள் ஏதாவது காணப்பட்டால் அது குறித்து இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எந்த விடயமும் இருநாடுகளிற்கும் இடையிலான கடலோர தொடர்புகளை பாதிக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.