ஏதேனும் ஒரு குற்றத்திற்காக சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டால், குற்றவாளியாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் வரை சிறுவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்படும் நபர்கள் 18 வயதிற்கும் குறைந்தவர்களாக ஆண் அல்லது பெண்ணாக இருந்தால், அவர்கள் குற்றவாளியாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் வரை கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறான அறிக்கைகள் வெளியிடும் போது அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றால், சமூகத்தில் அவர்கள் தொடர்பில் பெரும் பிரச்சினைகள் ஏற்படும். இது குறித்து மிகவும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அது சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் எனவும் அமைச்சர் சந்திரானி பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.