சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஜனநாயகத்துக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான சுனந்த தேசப்பிரிய இது தொடர்பில் ஜெனீவாவில் இருந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள், ஜனநாயக செயற்பாடுகளை மனித உரிமைகள் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக குறிப்பிட்டிருப்பதன் மூலம் இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை காலமும் இல்லாத நிலையில் இந்த அறிக்கையில் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கடுமையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையானது இலங்கையின் பக்கம் சாதகமான காற்று வீசத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறியாகும்.
அத்துடன் மனித உரிமைகள் அமர்வின் ஆரம்பத்தில் இலங்கையின் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை அடியொட்டி புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பது இலங்கையின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருப்பதற்கான அடையாளமாகும்.
மேலும் எந்தவொரு விடயத்தையும் செய்தே தீரவேண்டும் என்பதாக எந்தவொரு வற்புறுத்தலும் இல்லாத நிலையில்,
குறித்த விடயங்களை இலங்கை செய்து முடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஜெனீவா அறிக்கை வெளியாகி இருப்பது இலங்கை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதற்கான அறிகுறியாகும்.
அந்த வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையானது இலங்கை மீதான பாராட்டுப்பத்திரமே அன்றி வேறில்லை என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.