கொட்டதெனியா சிறுமி படுகொலை சந்தேகநபரின் மரபணுவை பரிசோதிக்க நடவடிக்கை

340
கம்பஹா – கொட்டதெனியா பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் சட்ட வைத்திய பரிசோதனை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

p

SHARE