இரத்தினபுரி, காவத்தையில் 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரினால் குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
காவத்தை கொட்டகெத்தன, ஓபாத பிரதேசத்தில் தோட்டத்தில் நேற்று நடந்த கொலைச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழுவினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. கடந்த பல வருடங்களாக கொட்டகெத்தன பிரதேசத்தில் மர்மமான பல கொலைகள் இடம்பெற்று வருகின்றமை அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.