வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் உள்ள பிரபல கடையில் துணிகர திருட்டு

267
வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள பிரபல மோட்டர் வாகன உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் திங்கள் இரவு துணிகர திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு வியாபார நடவடிக்கையில் முடிவடைந்து கடையை பூட்டிவிட்டு வீடு சென்ற உரிமையாளர் இன்று காலை 8 மணிக்கு கடையை திறப்பதற்காக வந்த போது கடை உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

கடையின் முன்பக்க வாயில் கதவின் 8 பூட்டுக்களையும் உடைத்து உள்நுழைந்த திருடர்கள் கடையில் உள்ள பணப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த வர்த்தக நிலையத்தில் சீசீடிவி கமரா பொருத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE