டெல்ஹிக் கூரையில் இருக்கிற கோழியை பிடிக்காமல் வாசிங்டன் என்ற வைகுந்தத்திற்க்கு சவால் விடுகிறார்கள்:

328

அமரிக்க கொடி ஒபாமா கொடும்பாவி எரிப்புக்கு கண்டணம் – வ. ஐ. ச. ஜெயபாலன்:-

“டெல்ஹிக் கூரையில் இருக்கிற கோழியை பிடிக்காமல் வாசிங்டன் என்ற வைகுந்தத்திற்க்கு சவால் விடுகிறார்கள்:

ஈழ ஆர்வலர்கள் சிலர் அமரிக்க தேசியக்கொடியையும் ஒபாமா கொடும்பாவியையும் ஈழ ஆதரவு பதாகைகளுடன் எரித்த சேதி அதிற்ச்சி தருகிறது. இது இன்ரைய நிலையில் ஈழ தமிழர் நலன்களுக்கு எதிரான செயலாகும். ஈழத் தமிழருக்கு எஞ்சியுள்ள கடைசிப்பாலங்களையும் தகர்க்கிற குறுங்குழுவாத முயற்ச்சி இது. தமிழக அவர்கள் டெல்ஹி என்கிற கூரையில் ஏறி இந்திய அரசின் ஆதரவு என்கிற கோழியையாவது பிடித்து தருவார்கள் என்பது மட்டும்தான் கடந்த முப்பது வருடங்களாக ஈழத் தமிழர்களின் எதிர்பார்பாக இருந்தது. ஆனால் டெல்ஹிக் கூரையில் இருக்கிற கோழியை விட்டுவிட்டு வாசிங்டன் என்கிற வைகுந்தத்திற்க்கு சவால் விடுவதிலேயே இவர்கள் குறியாக இருக்கிற்கள்.
.
உலகில் எல்லா மனிதர்களும் எல்லா அரசுகளும்சொந்த நலன்கள் உண்டு. இருந்தும் கழத்தில் சிங்கள அரசுக்கு கொஞ்ச அழுத்தமாவது கொடுப்பது அமரிக்க மேற்குலக அரசுகள் தான். அவர்களே ஐநாவில் போர்க்குற விசாரணை என்கிற பேச்சை முன்னிலைப் படுத்தினார்கள்.. அமரிக்க அறிக்கையின் தீவிரம் போதாதெனில் இந்திய அரசு மூலமாக திருத்தங்கள் கொண்டு வந்திருக்கலாம். அல்லது அமரிக்காவுக்கு வேண்டுகோள் வைதிருக்கலாம்.
ஈழ தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட சம்பந்தன் போன்ற தலைவர் களோடு மற்றும் ஐநாவில் செயல்படும் எங்கள் மனித உரிமை ஆர்வலர்களோடு கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் தமிழக ஆர்வலர்கள் எடுக்கக்கூடாது. அவர்களது கண்மூடித்தனமான செயற்பாடுகளுக்கு ஈழத் தமிழர்கள் இரத்தத்தாலும் கண்ணீராலும் விலை கொடுக்க நேரிடும்.

SHARE