இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் முறையிட்டு உள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கடந்த மே மாதம் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்றைய தினம் நடைபெற்றது.
குறித்த வழக்கு விசாரணையின் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என வினாவிய போது சந்தேக நபர்களில் ஒருவர் இணையத்தளங்கள் எங்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிடுகின்றது. அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதவான் வழக்கின் போக்கினை திசை திருப்பும் விதமான செய்திகள் வெளியிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் அவதூறு செய்திகள் தொடர்பில் பொலிசாரிடம் முறையிடுங்கள் என பதிலளித்தார்