சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன் எடுக்கப்படும் உள்நாட்டு பொறிமுறைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்:

280
சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன் எடுக்கப்படும் உள்நாட்டு பொறிமுறைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்:

 

இலங்கை மக்கள் தலைமைதாங்கும் அவர்களிற்கு சொந்தமான நாட்டின் தலமையில், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் உள்நாட்டு பொறிமுறைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் என அந்நாட்டின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியை நியுயோர்க்கில் சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்ததாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜனநாயசுதந்திரத்தை மீள ஏற்படுத்தவும், ஐக்கியநாடுகள் மற்றும் ஏனைய முக்கிய சகாக்களுடன் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை கெரி பாராட்டியுள்ளார்.

SHARE