நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நிதி அமைச்சர் விசேட உரை

279
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நிதி அமைச்சர் விசேட உரை:-

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
எதிர்வரும் சில நாட்களில் இந்த விசேட உரையை ஆற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதார மாற்றங்கள் எவ்வாறு உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதனையும் தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும்,பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் எவ்வித உத்தேசமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் மயப்படுத்தல் என்ற சொல்லை அரசாங்கம் அகராதியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

SHARE