மரபணு சோதனை அறிக்கையை துரிதமாக சமர்ப்பிக்க நீதவான் உத்தரவு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

300
மரபணு சோதனை அறிக்கையை துரிதமாக சமர்ப்பிக்க நீதவான் உத்தரவு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

 

படுகொலை செய்யப்பட்ட  புங்குடுதீவு மாணவியின் மூக்கு கண்ணாடியினை பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், மரபணு சோதனை அறிக்கையை துரிதமாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் உத்தரவு இட்டுள்ளார்.
கடந்த மே மாதம் படுகொலை செய்யபப்ட்ட புங்குடுதீவு மாணவியின் வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்றைய தினம் எடுத்து கொள்ளப்பட்டது.
மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களும் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் முற்படுத்த பட்டு வழக்கு விசராணை மேற்கொள்ளப்பட்டது.
 
அதன் போது மாணவியின் மூக்கு கண்ணாடி சந்தேக நபர் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்டதாக பொலிசாரினால் தெரிவிக்கபட்டது. அதனை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு இட்டார்.
அத்துடன் கடந்த வழக்கு தவணையின் போது மாணவியின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு இட்டு இருந்த போதிலும் இன்றைய தினம் அந்த அறிக்கை நீதிமன்றில் சமர்பிக்க ப்படவில்லை.
மரபணு சோதனை அறிக்கையினை துரிதப்படுத்தி மன்றில் சமர்பிக்கமாறு நீதவான் உத்தரவு இட்டதுடன், வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதாவன் நீதிமன்றத்தை சூழ பொலிஸ் விஷேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததுடன் சந்தேக நபர்களும் பலத்த பாதுகாப்புடனையே சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
SHARE