பெண்களின் உரிமைகளை மேம்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

287

பெண்களின் உரிமைகளை மேம்படுத்த அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெண்களின் உரிமைகளை உறுதி செய்து மேம்படுத்த இலங்கை அரசாங்கமும் தாமும் பொறுப்புணர்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூளேர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒர் அங்கமாக ஆண் பெண் பால் நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் குறித்த கூட்டத்தில் இந்தக் கருத்துக்களை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.“பெண்கள் வானத்தின் அரைவாசியை ஏந்தியிருக்கின்றனர்” என்ற சீனத் தலைவர் மாவோ சேதுங்கின் வார்த்தைகளை ஆதாரம் காட்டி ஜனாதிபதி தனது உரையை ஆரம்பித்துள்ளார்.
இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், சர்வஜன வாக்குரிமை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய உரிமைகளை பெண்களுக்கும் வழங்கி ஆண் பெண் பால் நிலை சமத்துவத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து இன சமூகங்களினதும் ஒட்டு மொத்த உலகினதும் நீடித்த நிலையான அபிவிருத்தி மேம்பாட்டுக்கு பெண்களை வலுவூட்டுதலும் அவர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வதும் இன்றிமையாதது என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நீண்ட காலமாகவே பெண்களின் உரிமைகளை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான நலன் திட்டங்களை ஏற்படுத்த விசேட திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆண் பெண் பால் நிலை சமத்துவத்தை நிலைநாட்டவும் பெண்களை வலுவூட்டவும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE