மாலைதீவு படகு வெடிப்புச் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – இலங்கை

312

 

மாலைதீவு படகு வெடிப்புச் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - இலங்கை

மாலைதீவில் இடம்பெற்ற படகு வெடிப்புச் சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத்தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.நேற்றைய தினம் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் விமான நிலையத்திலிருந்து தலைநகருக்கு பயணம் செய்த படகு திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கை அறிவித்துள்ளது. பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, உதவிகளை வழங்குவதாக தமக்கு அறிவித்தார் என மாலைதீவு பதில் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஹ_செய்ன் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த உதவியை மாலைதீவு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், வெடி விபத்து குறித்த இரசாயன பகுப்பாய்வுகளை நடத்தி தருமாறு இலங்கையிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்hனள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ ஆகியோர் தொடர்பு கொண்டு விசாரித்ததாகத் தெரிவித்துள்ளார்.

SHARE