சர்வதேச விவகாரத்தில் மகிந்த செய்த தவறை இந்த அரசும் செய்கிறது: சம்பிக்க

281

“இராணுவத்தை பாதுகாக்கும் உள்ளகவிசாரணையே தேவை”

சர்வதேச விவகாரத்தில் மகிந்த செய்த தவறை இந்த அரசும் செய்கிறது: சம்பிக்க : குளோபல் தமிழ் செய்தியாளர்:-

தேவையற்ற வகையில் சர்வதேசத்திடம் வாக்குறுதிகளை கொடுத்து மகிந்த ரஜாபக்ச செய்த தவறை புதிய அரசும் செய்து கொண்டிருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடியுள்ளார்.

அமெரிக்காவின் தீர்மான வரைபை ஏற்றுக்கொள்வதாக இலங்கை கூறியிருப்பது சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்வதற்குச் சமனானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் தாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை தெரிந்தும் முட்டாள்தனமான முடிவை இந்த அரசாங்கம் எடுப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்று அவசியம் என்று தெரிவித்த அவர் அது இலங்கை இராணுவத்தை பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் அந்த விசாரணையின் ஊடாக நாட்டின்மீதான அவப்பெயரை நீக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் தீர்மான வரைபை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இதன் மூலம் இலங்கை சுயாதீனமாக செயற்பட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்

SHARE