யாழ். கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று பிடிபட்டுள்ளது.

313

யாழ். கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று பிடிபட்டுள்ளது.

இதன்போது குறித்த ரவுடிகளிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள்,கத்தி,வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இக்குழுவில் 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசியில் இருந்து நீலப்படங்கள்,பாடசாலை மாணவிகளின் புகைப்படங்கள் என்பன காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள்களின் அதிக வேகமாக குழுவினர் பயணிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலில் போது துரிதமாக செயற்பட்ட பொலிஸார் இக்கும்பலை கைது செய்துள்ளனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் கொக்குவில்,இணுவில்,தாவடி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவருகின்றது.

அத்துடன் கடந்த மாதத்திற்கு முன்னர் யாழ் நீதிமன்ற தாக்குதலில் இக்குழுவில் உள்ள ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் எவ்வித ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை .
24559

24560

24561

24562

 

 

 

 

SHARE