கொளுத்தும் வெயில் முட்டி போடும் தண்டனை 7-ம் வகுப்பு மாணவி பலி

630

ஜார்கண்ட் மாநிலம் பசூர் மாவட்டம் லத்கரை சேர்ந்த ஏழை சிறுமி ரூப்வந்தி குமாரி அங்குள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி வகுப்பிற்கு வீட்டுப்பாடம் எழுதாமல் சென்று உள்ளார். இதனால் கோபம் அடைந்த ஆசிரியர் சத்யேந்திர யாதவ் சிறுமியை கொளுத்தும் வெயிலில் முட்டி போடும் தண்டனை அளித்து உள்ளார். சிறுமியின் முதுகில் செங்கல்லை கட்டி இந்த் தண்டனையை அளித்து உள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியிலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக சிறுமியை அங்குள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டுவீட்டுக்கு திரும்பினார். இருந்தாலும் தொடர்ந்து உடல் நலக்குறைவுடனேயே காணப்பட்டு உள்ளார்.அவரது குடும்பம் ஏழை குடும்பம் என்பதால் தொடர்ந்து சரியான சிகிச்சை அளிக்க முடிய வில்லை. இந்த நிலையில் சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.

தற்போது சிறுமியின் பெற்றோர்கள் சம்பந்த்தப்பட்ட் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி வருகின்றனர். மாவட்ட கல்வி அதிகாரி இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். விசாரணை அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.
2015092912150790

SHARE