யோசனையில் வெளிநாடுகளின் பங்களிப்பு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும்!- ஆர் சம்பந்தன்

622
ஐக்கிய நாடுகள் ஜெனீவா பேரவையில் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான யோசனையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உள்ளடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பொதுநலவாய நாடுகள், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் போன்ற விடயங்கள், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் என்று கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சியின் போது உள்நாட்டு விசாரணைகளில் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

இதன் காரணமாக பொதுமக்களை பொறுத்தவரை உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. இதனைக் குறை கூறமுடியாது என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள யோசனையின் மதிப்பீடுகள், 32வது, 34வது ஜெனீவா அமர்வுகளின் போது எடுத்துக் கொள்ளப்படவுள்ளன என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE