ஹெரோயின் விற்பனையில் சம்பாதித்த 100 கோடியை டுபாய் நாட்டுக்கு அனுப்பிய மொஹமட் சித்திக்

276
பாரிய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரியான மொஹமட் சித்திக் என்பவர், போதைப் பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த சுமார் 100 கோடி ரூபாவை டுபாய் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொஹமட் சித்திக் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற போதே இது தெரியவந்துள்ளது.

மொஹமட் சித்திக் பாகிஸ்தான் மற்றும் டுபாய் நாடுகளில் இருந்து இலங்கைக்கு கடத்தி வந்த ஹெரோயின் போதைப் பொருள், வெலே சுதா மூலமாக நாட்டுக்குள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சம்பாதித்த சுமார் 100 கோடி ரூபா கொலன்னாவ பிரதேசத்தில் உள்ள இடமொன்றில் இருந்து டுபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடுகளுக்கு இடையில் பணம் பரிமாறிக்கொள்ளும் முறையின் கீழ் இந்த பணம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.

டுபாய் நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

பாவா என்ற இந்த நபர் தற்போது நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும் மொஹமட் சித்திக்கை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.

SHARE