ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நேருக்கு நேர் சந்தித்த மஹிந்த, சந்திரிக்கா

289
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகிய இருவரும் இந் நாட்டில் கடந்த காலங்களில் அதிகமாக பேசப்பட்ட கதாபாத்திரங்களாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் வரையிலான காலப்பகுதி வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிக்க குமாரதுங்க ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை.

எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முதன் முதலாக நேற்றைய தினம் சந்திரிக்காவும், மஹிந்தவும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.

நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்கு சென்ற சந்தர்ப்பத்திலே இவ்வாறான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த இடத்தில் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

SHARE