தேர்தல் முறை மாற்றத்திற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கும்: பிரதமர்

320
புதிய தேர்தல் முறை தொடர்பில் அனைத்து கட்சிகளுடனும் இணக்கப்பாடு எட்டப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சிகளின் இணக்கப்பாடுகளுக்கமைய இவ் வருடம் நிறைவுக்குள் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் தேர்தலுக்குள் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE