ஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும் – ஐரோப்பிய ஒன்றியம்

313

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.இலங்கை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கத் தயார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லாட்சியை வலுப்படுத்தல், மனித உரிமை மேம்பாடு, நல்லிணக்கம், நீதியை நிலைநாட்டுதல் போன்ற விவகாரங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
முதல் கட்டமாக சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE