மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கைகளை பிரசூரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட நிசாங்க உதலகம ஆணைக்குழு மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு ஆகியன தொடர்பிலான விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கபே மற்றும் மனித உரிமை நிலையம் ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளன. குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் மெய்யான அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதன் முதல் கட்டம், இந்த அறிக்கை சமர்ப்பிப்பாகவே அமைய வேண்டுமென தெரிவித்துள்ளன.