சிறுவர்களை பாதுகாப்பதற்கு சட்டங்களை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் சிறுமியரை பாதுகாப்பதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோரும், சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சிறுவர்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் துர்பாக்கியமானவை எனவும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.