காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் – அல் ஹ_செய்ன்

341
புதிய அரசும் விசாரணைக்கு ஒத்துழைக்க பின்வாங்குகிறது
 
01. உள்ளக விசாரணைக்குரிய கட்டமைப்பில்லை
 
02. கலப்பு நீதிமன்ற விசாரணை அவசியம்
 
03. மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்
 
04. விசாரணைக்கு வரலாற்று சந்தரப்பம்
 
05. உள்ளக விசாரணை தோல்வியடையும்
 

06. படையினரும் லிகள் இயக்கமும் சட்டத்தை மீறியது

இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையை நடத்த கோரியிருக்கும் நிலையில் அதற்கான நம்பகரமான கட்டமைப்பு இலங்கையில் இல்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹசைன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டத் தொடரில் நேற்றைய தினம இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்பித்து உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையின் குற்றவியல் சட்டமுறை நம்பகரமானதாக அமையாத காரணத்தினாலேயே தான் விசேட கலப்பு நீதிமன்றத்தின் விசாரணையை வலியுறுத்தியிருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுப்பாளர்களைக் கொண்டு மனித குலத்திற்கு எதிராக நடந்த குற்றங்களை விசாரணை செய்ய பரிந்துரைத்தாகவும் ஆணையாளர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நீதியை வழங்க விசேட கலப்பு நீதிமன்றம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் ஆட்சி மாற்றத் தொடர்ந்து இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறுவன மறுசீரமைப்புக்கும் நீண்ட கால நல்லிணக்கத்திற்கும் அது வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்த அவர் இலங்கையின் புதிய அரசும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க பின்வாங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனவரி எட்டின் பின்னர் கொழும்பிலே கருத்து சுதந்திரம் ஏற்பட்டாலும் வடக்கு கிழக்கில் அச்சுறுத்தல், சித்திரவதைகள், இராணுவ புலனாய்வுச் சேவைகள், கண்காணிப்புத் தலையீடுகள் என்பன தொடர்வதாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் பாதுகாப்புச் செயற்பாடுகளில் பாரிய மாற்றமும் சீர்திருத்தமும் தேவை என்று கூறிய அவர் யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகியும் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர தீர்வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளக விசாரணை இலங்கையில் தோல்வியடையும் என முன்னைய அறிக்கையில் கூயிருந்தது நடைபெற்றதை இலங்கையில் காண முடிந்தததாகவும் அவர் கூறினார்.
இலங்கை அரச படைகள் மற்றும் துணை ஆயுத குழுக்கள் சட்ட விரோத சிவிலியன் கொலைகளில் ஈடுபட்டுள்ளதுடன் புலிகள் இயக்கமும் அவ்வாறு கொலைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
 
காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் – அல் ஹ_செய்ன்:-
சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதில் படையும் புலிகளும் தோல்வி கண்டுள்ளதாகவும் அரசு கட்டுப்பாடுகளை விதித்து மக்களை துன்புறுத்திய பாரிய குற்றங்களை இழைத்ததுள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு உதவும் விதமாக சர்வதேச கட்டமைப்புக்களின் ஊடாக விசாரணையை நடத்தி இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கு உதவ மனித உரிமை பேரவை தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார்.
பலவந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், கண்காணிப்பாளர்களும் பாரதூரமான கேள்விகளை எழுப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.இவ்வாறான பின்னணியில் ஆணைக்குழுவின் பணிகளை முன்னெடுப்பதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடனான ஓர் விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைக்குழு நிறுவப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணைக்குழுவின் நம்பகத்தன்மை மற்றும் பக்கச்;சார்பு நிலைமை குறித்து காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார். நம்பகமானதும் சுயாதீனமானதுமான ஓர் விசாரணைப் பொறிமுறைமையின் ஊடாக காணாமல் போனதல்கள் குறித்த சம்பவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE