அப்பாவி யுவதியை கடுமையாக தாக்கும் இளைஞர்கள்!

340
இரண்டு இளைஞர்கள் அப்பாவி யுவதி ஒருவரை கடுமையாக தாக்கும் சம்பவம் ஒன்று தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் பகுதி நடந்துள்ள இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பதை அறிய முடியாத போதிலும் இளைஞர்களின் செயல் மிகவும் கீழ்த்தரமாக இருப்பதை காணமுடிகிறது.

சம்பவ இடத்தில் இன்னுமொரு யுவதியும் இருக்கின்றார். போதும் என அந்த யுவதி கூறுவதை கேட்காது, இந்த இளைஞர்கள் யுவதியை தாக்குகின்றனர்.

இதனால், அந்த யுவதி மயங்கி விழுவதையும் காணொளில் காணமுடிகிறது. எதற்காக இளைஞர்கள் யுவதியை தாக்குகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

SHARE