தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வினை நிச்சயமாக எடுப்போம்: இரா.சம்மந்தன்

321
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனை கௌரவிக்கும் நிகழ்வும் இன்றைய தினம் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றதுள்ளது.

இன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், பாடசாலையின் பழைய மாணவனுமாகிய இரா.சம்மந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை மட்டம், கோட்டமட்டம், வலய மட்டத்தில் இடம்பெற்ற தமிழ்தின போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

அத்துடன்,எதிர்க்கட்சி தலைவருக்கு வாழ்த்துப்பாக்கள், பொன்னாடை ஆகியவற்றை வழங்கி பாடசாலை சமுகம் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன்,

புனித பத்திரிசியார் கல்லூயில் தான் கல்விகற்ற காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை நினைவுகூர்ந்து, தன்னை வளப்படுத்திய ஆசிரியர்கள் தொடர்பாகவும் நினைவுகூர்ந்தார்.

எமது வடமாகாண மக்கள் 30 வருடங்கள் கல்வியில் பின்தங்கியிருக்கின்றார்கள். கடந்த காலத்தில் அனைத்து துறைகளிலும் திறமைசாலிகளாக விளங்கிய எமது மாகாண மாணவர்கள் கடந்த 30வருடங்கள் நடைபெற்ற அசாதாரண நிலமைகளினால் கல்வியில் பின்தங்கியிருக்கின்றார்கள்.

இந்த நிலை நீடிக்க முடியாது. நாம் மீண்டும் அந்த நிலைக்கு திரும்பி வரவேண்டும். கல்வியில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டது.

அந்த அநீதியினாலேயே இந்த நாட்டில் வன்முறை வெடித்தது, ஆனால் வன்முறை ஊடாக எந்தவொரு பிரச்சினைக்கும் நியாயமான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது. என்பதனை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

எனவே நாம் கல்வியில் முன்னேறி இருந்த காலத்தில் இருந்த நிலைமையினை நாங்கள் மீண்டும் உருவாக்க வேண்டும். அதனை மனதில் கொண்டு பாடசாலை மாணவர்கள் தங்களுடைய கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டவேண்டிய தேவையுள்ளது.

அரசியல் விடயங்கள் தொடர்பாக எமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்திருக்கின்றது. அது எமது கட்சிக்கும், எமது மக்களுக்குமான பதவி அது எனக்குரிய பதவி அல்ல.

அந்தவகையிலேயே நான் எனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை பயன்படுத்துவேன். நாம் இந்த பதவிக்கு வர முன்னதாகவே எம்மை வெளிநாட்டவர்கள் வந்து சந்தித்தார்கள்.

உண்மை நிலையினை கேட்டறிந்து கொண்டார்கள். இதனால் சர்வதேச மட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ் மக்கள் மீதான சர்வதேசத்தின் கவனம் குவிந்திருக்கின்றது.

இதனால் ஜெனீவாவில் பல தீர்மானங்கள் வந்திருக்கின்றன. இன்றைய தினமும் ஒரு வலுவான தீர்மானம் வரும். ஆதனை அனைத்து நாடுகளும் ஆதரிக்கும் இலங்கையும் அதனை ஆதரிக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.

மேலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான ஒரு அரசியல் தீர்வினை நாங்கள் நிச்சயமாக எடுப்போம். எங்கள் மக்களும் இறைமைக்கு உரித்துடையவர்கள். அந்த அடிப்படையிலேயே தீர்வும் எட்டப்பட வேண்டும். என்பதில் நாங்கள் திடமாக உள்ளோம்.

தந்தை செல்வா கூறுவார். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை அவர்கள் விரும்பும் வகையில் நியாயமான தீர்வாக பெற்றுக் கொடுக்க வேண்டும். அந்த வழியில் நாங்கள் திடமாக இருக்கவேண்டும். என ஆனால் அதற்காக நாங்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்க முடியாது.

அதற்கும் ஒரு எல்லை இருக்கின்றது. என அதனையே நான் இன்றளவும் மனதில் கொண்டிருக்கின்றேன். தற்போதும் இங்கு வரும்போது தந்தை செல்வாவின் நினைவிடத்தில் மல் அஞ்சலி செலுத்திய பின்னர், அங்கு பேசும்போது நான் கூறிய விடயம்.

இந்த இனப்பிரச்சினைக்கு நாங்கள் ஒரு தீர்வினை விரைவில் அடைவோம். அது தந்தை செல்வா ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வாக இருந்தால் அதனை ஆதரிப்பேன்.

இல்லையெனில் அதனை நான் நிராகரிப்பேன் என நாம் தொடர்ந்தும் இந்த மக்களுக்காக உழைப்போம். மக்களை நாம் கைவிடப்போவதில்லை என்றார்.

SHARE