முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன

309
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்குகள் அடுத்த வருடம் ஜனவரி 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அவற்றை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்மானித்தது.

சரண குணவர்தன, தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில் சில வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்காக பெற்றுக்கொண்டு பணம் தொடர்பில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

லஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.

SHARE