நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைக்கப்பட உள்ள உதய கம்மன்பில

275
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சபாநாயகருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், கருத்து வெளியிட்டமைக்காக அவரை, நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் கம்மன்பில நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

சபாநாயகர் பிரதமரின் ஊடகப் பேச்சாளர் போல் செயற்படுகிறார். பிரதமர் கூறுவதையே சபாநாயகர் கூறுகிறார். இதனால், அவர் சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஊடக சந்திப்பொன்றில் உதயகம்மன்பில கூறியிருந்தார்.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், கட்சித் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நடைபெற்றது.

SHARE