கே.பியின் விசாரணைகளை ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

288
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச பிரதானி குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி  தொடர்பிலான விசாரணைகளை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கே.பி  தொடர்பிலான விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் பிரதமரினால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குமரன் பத்மநாதனுக்கு எதிராக ஆயுத சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியாதென்பது சட்டமா அதிபரின் கருத்தாக இருப்பதனால் விசாரணைகளை ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்குமாறு பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE