வெளிநாட்டு நீதவான்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் எவ்வித தவறும் கிடையாது.
வெளிநாட்டு நீதவான்கள் அமெரிக்காவின் சொல்படித்தான் நடப்பார்கள் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
1972ம் ஆண்டு வரையில் வெளிநாட்டு நீதவான்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
வெளிநாட்டு நீதவான்களின் நடவடிக்கைகள் குறித்து தீவு மனப்பான்மையுடையவர்கள் சந்தேகமாக பார்ப்பார்கள்.
உள்நாட்டு விசாரணைகள் திருப்தி அளிக்காத காரணத்தினால் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமைகள் கடந்த காலங்களில் வெற்றியளிக்கவில்லை என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும்.
இலங்கையைச் சேர்ந்த நீதவான்கள் சர்வதேச நீதிமன்றங்களில் சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளனர்.
சீ.ஜீ. வீரமந்திரி, அசோக டி சில்வா போன்றவர்கள் சர்வதேச ரீதியில் கீர்த்தி மிக்கவர்கள்.
அவ்வாறான நீதவான்களின் திறமைகளை வெளிநாட்டவர்கள் சந்தேகத்திற்கு உட்படுத்துவதில்லை.
சர்வதேச நீதவான்களின் பங்களிப்பானது உள்நாட்டு நீதிமன்றினை எந்தவகையிலும் இழிவுபடுத்தாது என கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் சட்டத்தரணி லக்ஸான் டயஸ் தெரிவித்துள்ளார்.