சீசெல்ஷூக்கான மிஹின் லங்கா விமான சேவை ஆபத்தில்!

637
கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைக்கும் சீசெல்ஸ் நாட்டுக்கும் இடையிலான மிஹின் லங்கா விமான சேவை தற்போது கடும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக இலங்கை விமானிகள், சிவில் விமான சேவை அதிகார சபைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

மிஹின் லங்கா விமானங்களில் வெளிநாட்டு விமானிகள் அதிகளவில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மூன்று இந்திய விமானிகள் மற்றும் மூன்று கிரேக்க விமானிகளுக்கு அதிகளவான சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

செலவுகளை ஈடு செய்ய முடியாத நிலையில், சர்வதேச விமான பயண தரங்களை மீறி சட்டவிரோதமாக இந்த விமான சேவை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கைக்கும் சீசெல்ஸ் நாட்டுக்கும் இடையில் ஆயிரத்து 600 வான் மைல் தூரம் காணப்படுகிறது. இந்த வான் வழியில் அவசரத்திற்கு தரையிறக்கக் கூடிய விமான நிலையங்கள் எதுவும் இல்லை. 200 பயணிகள் செல்லும் விமானத்தில் 70 பயணிகள் மாத்திரமே பயணித்து வருகின்றனர். அத்துடன் வாரத்திற்கு மூன்று முறை விமான சேவை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE