கலப்பு நீதிமன்றிற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு – பாராளுமன்றில் அமளிதுமளி பதற்ற நிலை

299

கலப்பு நீதிமன்ற பொறிமுறைமைக்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பாராளுமன்றில் நடைபெற்று வரும் அமர்வுகளில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கலப்பு நீதிமன்றம் வேண்டாம் எனக் கோரும் வகையிலான பதாகைகளை காட்சிப்படுத்தி இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, நிரோசன் பிரேமரட்ன, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க போன்றவர்கள் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால் பாராளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றில் நிலவிய பதற்ற நிலைமையைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய, அவை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

SHARE