அரசாங்கம் ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உள்ளது – விமல் வீரவன்ச

311

தற்போதைய அரசாங்கம் ஓரினச் சேர்ச்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உள்ளதாக ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக்குமாறு கோரி யூ.எஸ். எயிட் நிறுவனம் அண்மையில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியருந்ததாகத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட நபர் ஒருவரின் சுய விருப்பு வெறுப்புக்களில் தாம் தலையீடு செய்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மேற்குலக நாடுகளின் தலையீடுகள் அழுத்தங்கள் காரணமாக சட்டங்களில் மாற்றம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் தேவைகளுக்காக இலங்கையில் சட்ட மாற்றங்கள் செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட வகையில் நாட்டைப் பலவீனப்படுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE