யுத்தவீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது– லக்ஸ்மன் கிரியல்ல கொழும்பு

306

யுத்த வீரர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைப் பொறிமுறைமையினால் யுத்த வீரர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே உள்ளக விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் விசாரணைகளின் போது யுத்த வீரர்களின் பாதுகாப்பினை அரசாங்கம் முழு அளவில் உறுதிப்படுத்தப்படும் எனவும், படைவீரர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்க இடமளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வெற்றியை ஈட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

SHARE