ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம், காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு

298

ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு நட்டஈட வழங்குமாறு உச்ச நீதிமன்றம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி தெமட்டகொட பகுதியில் வைத்து இரண்டு ஜே.வி.பி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
பொரளை பகுதியைச் சேர்ந்த ஜோசப் சில்வா மற்றும் சந்திரசேன ஹெட்டியாரச்சி ஆகிய இரண்டு உறுப்பினர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
ஊடகங்கள் மீதான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனக் கோரும் வகையிலான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டிருந்தனர்.
சட்டவிரோத சுவரொட்டிகளை வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இவருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சட்டவிரோதமான முறையில் கைது செய்துள்ளதாகவும் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இருவரினதும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது.
எனவே இருவருக்கும் தலா 25000 ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதியரசர்களான பிரியசாத் டெப், சிசிர ஆப்ரூவ் மற்றும் அனில் குணரட்ன ஆகியோர் இன்த மனுவை பரிசீலனை செய்திருந்தனர்.
அரசாங்கத்தின் சார்பில் காவல்துறை மா அதிபர் நட்ட ஈட்டை வழங்க வேண்டுமென நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்

SHARE