ஆஸி.யில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளார் நீரில் மூழ்கி மரணம்!!

347
தெற்கு அவுஸ்திரேலியாவின் Renmark பகுதியில் மரே ஆற்றில் நீந்திக் கொண்டிருந்த போது காணாமல் போன பரத் என்ற இலங்கை யாழ். புகலிடக்கோரிக்கையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்.

சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரியிருந்த பரத் என்ற இளைஞர் யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவராவார்.

21 வயதான பரத்தின் பெற்றோர், இரு சகோதரிகள் மற்றும் சகோதரன் ஆகியோர் இலங்கையில் வசிக்கிறார்கள்.

நேற்று தனது நண்பர்களோடு கரப்பந்து விளையாடிய பரத் பின்னர் மரே ஆற்றில் நீந்துவதற்காக சென்றுள்ளார்.

நீருக்குள் இறங்கிய 2 நிமிடத்திற்குள்ளேயே பரத்தை  நீர்ச்சுழி இழுத்துச் சென்றதாக அவரோடு இருந்த நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

நண்பர்கள் அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

SHARE