இக் கலந்துரையாடலுக்காக டலஸ் அழகபெரும, பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில உட்பட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசேடமாக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முன்னணி உறுப்பினர் குழுவுக்கு நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடுவதற்கு வழங்கப்பட்ட நேரம் தொடர்பில் இதன் போது இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள மரண தண்டனை அமுல்படுத்தல் தொடர்பில் இக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் சபாநாயகருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.