• தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளே அமெரிக்க தீரமானத்தை நிராகரித்த நிலையில் நீங்கள் ஆதரித்ததேன்?
• உள்நாட்டில் நடைபெறப்போகும் விசாரணையில் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்?
• நடைபெறப்போகும் விசாரணைக்கு வழக்குகளை தொடுக்கப்போவர்கள் உள்நாட்டு வழக்கு தொடுநர்களா? பொதுநலவாய நாடுகளின் வழக்கு தொடுநர்களா?
• ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளரே இலங்கையில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கின்ற நிலையில் இப்போது சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறது என நம்புகிறீர்களா?
• தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இந்த விசாரணைக்குழுவுக்கு உண்டா?
• நீங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுவதாக உங்கள் மீது தேர்தல் காலத்திலும் சரி இப்போதும் சரி குற்றம் சாட்டப்படுகிறதே?
• நீங்களும் சம்பந்தனும் சர்வாதிகாரப்போக்கில் செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
• வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சம்பந்தனும் நீங்களும் தானே அரசியலுக்கு கொண்டுவந்தீர்கள், ஆனால் இப்போது நீங்களே அவர் மீது குற்றம் சாட்டுகிறீர்களே?
• 2016ல் தீர்வு கிடைக்கும் என சம்பந்தன் கூறியிருக்கிறார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற ரீதியில் உங்கள் பதில் என்ன?
• கடந்த தேர்தலில் நீங்கள் பருத்தித்துறை தொகுதியை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்தப்பட்டீர்கள், குறிப்பாக வடமராட்சி கிழக்கை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்தப்பட்டீர்கள். ஆனால் போரினாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு பிரதேசத்திற்கு நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 5ஆண்டுகளில் ஏதாவது நிதி ஒதுக்கியிருக்கிறீர்களா?
இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கின்றார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
( இச்செவ்வி ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் அவர் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த போது பிரத்தியேகமாக எடுக்கப்பட்டதாகும்)