கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பை அவமரியாதை செய்வதாகும் – நாமல் ராஜபக்ஸ

304
கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பை அவமரியாதை செய்வதாகும் - நாமல் ராஜபக்ஸ:-

கலப்பு நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கையானது உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பை அவமரியாதை செய்வதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றமொன்றை அமைத்து அதன் ஊடாக விசாரணை நடத்துவது உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பினை இழிவுபடுத்தும் வகையிலானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பிற்கு இவ்வாறான விசாரணைகளை நடத்தும் இயலுமை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கலப்பு நீதிமன்றம் நாட்டின் இறைமையை மோசமாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகள் பக்கச்சார்பற்றதும், வெளிப்படைத்தன்மையுடையதுமாக அமைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்துடன் விசாரணை தொடர்பில் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகள் குறித்து அரசாங்கம் மக்களை தெளிவுபடுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE