இலங்கை வெளிவிவகார அமைச்சில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதை அமைச்சர் மங்களசமரவீர உறுதிசெய்துள்ளார்
இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
வெளிவிவகார அமைச்சில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதை அமைச்சர் மங்களமசமரவீர உறுதிசெய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களுடைய ஆலோசனைகளுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.அமைச்சரின் இந்த நடவடிக்கை காரணமாக வெளிவிவகார அமைச்சில் தற்போது முக்கிய பதவிகளில் உள்ள சிலர் மாற்றப்படலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன,
இதேவேளை இந்தவிவகாரம் தொடர்பாக பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சரிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தனது ஜப்பான் பயணத்தின்போது பிரதமர் வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்ததன் பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெனீவாவில் இராஜதந்திரியொருவரும், வெளிவிவகார அமைச்சக அதிகாரிகளும் செயற்பட்ட விதம் குறித்து பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து பிரதமர் உறுதியாகவுள்ளார்.தனது அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்களிற்கு பக்கபலமாக செயற்படக்கூடிய வெளிவிவகார அமைச்சை அமைப்பது குறித்து பிரதமர் உறுதியாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது