மொஹமட் சியாம் கொலை வழக்கு குறித்த தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் மொஹமட் சியாமின் சடலம் தொம்பே பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டது.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக்கொலைச் சம்பவத்துடன் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட சிலருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தக் கொலையுடன் குறித்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.