மாவையை திட்டமிட்டு களங்கப்படுத்தினாரா ஊடகவியலாளர்….?

346

 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகப் பாடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான கலந்துரையாடல் என்றபோர்வையில் சுவிஸ் பாசல் மாநகரில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

mavai-press-190615-seithy

இதனை மிகவும் கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்தார் மூத்த ஊடகவியலாளர்

நடந்தவை….

தனது சுயநல அரசியல் இருப்பை தக்கவைக்க நீண்டகாலமாக கூட்டமைப்பின் மூத்த தலைவர் மாவையை களங்கப்படுத்த நன்கு திட்டமிட்டிருந்தார்.

அதற்கு ஏற்ற வகையில் இளைஞர்களையும் தயார் படுத்தியிருந்தார்.

அதில் வேடிக்கை என்னவெனில் வருகை தந்த இளைஞர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு தாக்குவதற்கும் தயாராக இருந்த நிலையில் ஒருவாராக அதனை சுதாகரித்து கொண்டவர்கள் அந்த விபரீதத்தை தடுத்துள்ளனர்.

இவ்வாறு தடுக்கப்படவிட்டால் டக்ளசிற்கு வெலிக்கடையில் நடந்தது மாவைக்கு பாசல் மானிலத்தில் நடந்திருக்குமாம்…..

நீண்ட அரசியல் வரலாற்றையும் அனுபவத்தையும் கொண்ட ஒரு அரசியல் தலைவரை ஒரு இளைஞன் ஆக்ரோசமாக அநாகரிகமாக வினவும் போது தன்னை நடுநிலமையாளர் என தந்திரமாக பேசும் ஊடகவியலாளர் அதை உச்சாகப் படுத்துவது போன்று செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இதில் அமர்ந்திருந்த ஊடகவியலாளரின் அடிப்படை நிலைப்பாடு மாவை சுமந்திரனை அவமானப்படுத்துவதும் தமிழரசுக்கட்சியின் மக்கள் ஆதரவைச் சிதைப்பதும் அதன்மூலம் தனது சகாக்களைப் பலம் பெறவைத்து தனது எதிர்கால அரசியல் இலக்கை அடைவது என்பதாகும் . அது ஒருவாறு வெற்றியளித்துள்ளதாக லண்டனில் உள்ள ஊடகவியலாளரிடம் தொலைபேசியில் மன்டபத்திற்கு வெளியில் வந்து கூறியதுடன்… இனி பழைய மாதிரி புலிகளும் நம்மை மதிப்பார்கள் பழைய இடங்களை எல்லாம் பிடித்திரல்லாம் என ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினாராம் ஊடகவியலாளர்

என்ன செய்வது சேரிடம் அறிந்து சேர் என்று கூறுவதுபோல் நீண்ட போராட்ட வரலாற்றையும் அரசியல் அனுபவத்தையும் கொண்ட மாவை சேனாதிராசா இப்படிப்பட்ட தந்திரசாலிகளை நம்பி அவர்களை தமிழ் தேசியத்தின் பிதாமகர்களாக மக்கள்முன் விளம்பரப்படுத்துவதன் விளைவே இதுவாகும் .

மாடு சென்னால் கேட்காது. மணி கட்டிய மாடு சென்னால் தான் கேட்பாரோ மாவை எல்லாம் அவனுக்கே வெளிச்சம் ….

SHARE