இரண்டாவது நாளாக தொடர்கிறது தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம்

313
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிறைச் சாலைகளில் விசாரணையும் இன்றி விடுதலையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னி வழங்கிய விடுதலை செய்யுமாறு கோரி இரண்டாவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம், கொழும்பு, மகசின், பூசா, வெலிக்கடை, தும்பறை, அநுராதபுரம், நீர்கொழும்பு என 14 சிறைகளில் உள்ள 2014பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தமது போராட்டத்தை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றனர்.
தமது விடுதலைக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரையில் எதுவும் பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள சிறைக்கைதிகள் புதிய ஆட்சியாளர்களும் தமது கோரிக்கை தொடர்பில் பாராமுகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மகசீன் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார ஹெட்டியாராச்சி எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என்று வினவினார். பொதுமன்னிப்பு அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று இதன்போது தமிழ் சிறைக்கதைகள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை கைதிகளின் உணவு தவிர்ப்பை கைவிட உறுதி மொழி வழங்குங்கள் என்றும் விசாரணையை துரிதப்படுத்துமாறும் வட மாகாண முதல்வர் ஜனாதிபதியை கோரியிருப்பது தமக்கு அதிருப்தி அளிப்பதாக சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு விசாரணை வேண்டாம் என்றும் விடுதலையை வலியுறுத்தியே தாம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தாம் விசாரணை என்ற பெயரில் நீண்டகாலம் தடுத்து வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கட்சியாக இருந்தபோது கைதகிள்ன விடுதலைக்காக குரல் கொடுத்து வந்தபோதும் தற்போது ஆளும் கட்சியாகிய பின்னர் கைதிகள் விடயத்தில் முன்னைய அரசைப் போல நடந்துகொள்வதாக கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
SHARE