இலங்கை விசாரணைப் பொறிமுறைமயில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பும் உள்ளடக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பின் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்து குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுவதனை உறுதி செய்யுமாறு தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் ஆக்கபூர்வமான அடிப்படையில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகளை நம்பகமான முறையில் அமுல்படுத்துவதற்கு முனைப்பு காட்ட வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.