பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் இலங்கையின் சட்டக் கட்டமைப்பிலிருந்தே நீக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் பெரும் தடையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
கலப்பு நீதிமன்றமொன்றை அமைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும் இலங்கையில் சர்வதேச நீதவான்கள் விசாரணைகளில் பங்களிப்புச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்