73 வயதான தந்தையை நாய் கூட்டில் அடைத்த வைத்த மகள் கைது!

332
73 வயதான தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலகொல்ல பகுதியிலே இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து, 42 வயதான பெண்ணொருவரையே  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பலகொல்ல காவல்துறையினர், அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது.

பின்னர் 73 வயதான அந்த முதியவர் மெனின்கின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பலகொல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE